பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து சமீபத்தில் கண்டறிந்துள்ளார். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கிய நிலையில், பிரபல யூடியூபரான மணி என்பவரும் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, அவருடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணி ஒரு பெண்ணுடன் அந்தரங்க வீடியோ கால் பேசுவது போல் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அதை வேண்டுமென்றே யாரோ எடிட் செய்து பரப்பியுள்ளதாக மணி கூறியுள்ளார். மேலும், இப்படி கேவலமா எடிட் செய்து போடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன் என்றும் கேட்டுள்ளார். அவரது ரசிகர்களிடையே, இதுமாதிரியான என்னுடைய வீடியோவை யாரேனும் பரப்பினால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் மணியை வெச்சு செய்து வருகின்றனர்.
Read More : ’இனி காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது’..!! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!!