fbpx

அடுத்த செக்…! மின் மீட்டர்களில் எண்கள்… தமிழக அரசின் மின் வாரியம் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

மின் துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அரசு மீட்டர்களில் எண்களை பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக மின் வாரியம், வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தும் பணியை தொடங்கி உள்ளது. மின்வாரியத்தில் மின்சாரத்தை விநியோகம் செய்யப்டும் சாதனங்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு வாங்குகிறது, சில நிறுவனங்கள், தரமற்ற சாதனங்களை வினியோகம் செய்கின்றன. இதை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. பல பிரிவு அலுவலகங்களில் மீட்டர் இருந்தாலும், இல்லை என்று கூறி மின் இணைப்பு வழங்க தாமதம் செய்கின்றனர்.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க மின் வாரியம், ‘ஆதார்’ எண் போன்று மீட்டர், மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றுக்கு தலா ஒரு தனித்துவ எண்ணை வழங்க உள்ளது. அதன்படி, மீட்டரில், ‘QR CODE’ ஸ்கேன் குறியீட்டு எண்ணுடன், 16 இலக்கத்தில் மின் வாரியம், தயாரிப்பு நிறுவன குறியீட்டுடன் ஆங்கில எழுத்துக்களும், வரிசை எண்களும் இடம் பெற்று இருக்கும். டிரான்ஸ்பார்மரில், 15 இலக்கு எண்களும், மின் கம்பத்தில், 13 இலக்கத்திலும் எழுத்து, எண்கள் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.! மாரடைப்பிற்கான அறிகுறிகள் முன்னதாகவே தோன்றுமா.?

Fri Nov 24 , 2023
மாரடைப்பு என்பது மனித இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை 50 வயதிற்கு மேற்பட்டோரை தாக்கி வந்த இந்த இதய நோய் மற்றும் மாரடைப்பு தற்போது 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவருக்கும் ஏற்படும் அபாயம் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு பொதுவாக பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. மக்களின் மாறி வரும் வாழ்க்கை முறை துரித உணவுகள் மற்றும் உடலுடைய பின்மைய […]

You May Like