fbpx

உயிருடன் புதைக்கப்பட்ட நர்சிங் மாணவி..!! . மண்ணை விழுங்கி மூச்சு திணறி பலியான சோகம்..!! முன்னாள் காதலன் வெறிச்செயல்..!!

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் வசித்து வருபவர் ஜாஸ்மீன் கவுர் (21). இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், அவரது முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 மார்ச் மாதம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நடந்த வந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் இளைஞர் தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர கொலையின் அனைத்து தகவலும் நீதிமன்ற விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

அதன்படி, கடந்த 2021இல் தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக தாரிக்ஜோத் சிங்கிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், இளைஞர் தாரிக் ஜோத், ஜாஸ்மீனை பேசும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அவரை பின்தொடர்ந்து டார்சர் செய்துள்ளார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துள்ளார். இதனால் கோபடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளர். அதன்படி, அடிலெய்டில் என்ற பகுதியில் பயிற்சி செவிலியராக இருந்த நிலையில், அவரை அங்கிருந்து கடத்தியுள்ளார். காரில் பின்பக்கத்தில் ஜாஸ்மீனை அடைத்து, 4 மணி நேரம் காரை ஒட்டிச்சென்றுள்ளார். கிட்டத்தட்ட 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் அவரின் கண்களை கட்டியுள்ளார். உடலை அங்கிருந்து கேபிள் வயர்களை கொண்டு கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார். விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது தான் வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையின் ஆரம்பத்தில் தாரிக்ஜோத் சிங் கொலை செய்ததை மறுத்து வந்தார். ஜாஸ்மீன் கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை மீட்டு புதைத்தாகவும் கூறி வந்தார். இதனை அடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாரிக், சம்பவ இடத்திற்கு போலீஸை அழைத்து சென்றுள்ளார். அங்கு கவுரின் காலணிகள், கண்ணாடிகள், ஐடி கார்டு ஆகியவற்றை கண்டெடுத்தனர். மேலும், ஜாஸ்மீன் கடத்தப்பட்ட பிறகு, மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில் கையுறைகள், பேபிள் வயர்கள், மண்வெட்டி ஆகியவற்றை வாங்குவதை சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில், இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி அவர் கொன்றுள்ளார். அந்த பெண்ணை இவர் உயிருடன் புதைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மண்ணை விழுங்கி மூச்சு திணறி அந்த பெண் உயிரிழந்துள்ளார்” என்றார்.

Chella

Next Post

’அனுஷ்காவுக்கு திருமணமே ஆகாது.’.!! ’தொழிலதிபருடன் தொடர்பு’..!! பகீர் கிளப்பிய பயில்வான்..!!

Fri Jul 7 , 2023
நடிகை அனுஷ்கா ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர். இவர், யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன்பிறகு, 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் […]

You May Like