fbpx

ஒடிசா ரயில் விபத்து : மறையாத சோகம்… தொடரும் வேதனை…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கோர ரயில் விபத்து ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் இருந்ததைத் தொடர்ந்து விபத்து நடைபெற்று ஒரு வார காலமாகியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இன்னும் உடல்களை மீட்க போராடி வருகின்றனர்.

பல உடல்களுக்கு உரிமை கோருபவர்கள் இல்லை. சில உடல்களுக்கு பலர் உரிமை கோருகின்றனர். இதனால் சடலங்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினருக்கு விடுவிப்பதில் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பலியான 57 குடும்ப உறுப்பினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் உரிமை கோரப்பட்ட உடல்களுடன் பொருந்துகின்றன. இருப்பினும், உரிமை கோருபவர்கள் இல்லாத 30க்கும் மேற்பட்ட சடலங்கள் இன்னும் உள்ளன.
இந்த நிலையில், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடுக்கப்பட்டிருக்கும் உடல்களை அடையாளம் காணும் வகையில் அங்குச் சென்றிருக்கும் உறவினர்கள், குடும்பத்தினர்கள் அவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் உள்ளனர். அவர்களிடம் விரக்தியும் நம்பிக்கையின்மையும் காணப்படுகிறது.

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மணியாரி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நரேஷ் யாதவ், கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் தனது மூத்த மகனான அகிலேஷைத் தேடி வருகிறார். இவரைப் போல், இன்னும் பலர் தங்களது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் கடந்த 7ஆம் தேதியுடன் பீகாரைச் சேர்ந்த 88 பேரையும் மேற்கு வங்கத்தில் 31 பேரையும் காண முடியவில்லை என அங்கு புலம்பல்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உடல்களை ஒப்படைக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் பதற்றத்தில் உள்ளனர். ஒரே மாதிரியான உடல்களை பலர் உரிமை கொண்டாடுவதால் இது தங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Maha

Next Post

திருச்சி ரயில்வே குட்செட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தற்காலிக வேலை நிறுத்த போராட்டம்...!

Sun Jun 11 , 2023
முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையின் போது ரேஷன் அரிசி பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அலைக்கழிக்கப்பட்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும், அத்தியாவசிய ரேசன் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்செட் லாரிகளை அலைக்கழித்து விபத்துக்குள்ளாகிய செயலைக்கண்டித்தும் மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருச்சியில் ரயில்வே குட்செட் டிரைவர்கள் நல சங்கம் சார்பில் […]

You May Like