நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகையை அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலைகள் குறித்து அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், வணிக சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கி வந்தன.

இந்நிலையில், இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனி ஹோட்டல்கள், டீக்கடைகளில் விலை உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வணிக சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக விநியோகஸ்தர்களின் புகார்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல், ”இனி வணிக கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வசதி கிடைக்காது” என விநியோகஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவானது கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.