சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அதில் 10 ஆம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகும் என்று கூறப்பட்டது.. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.. பின்னர் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்றும் வெளியாகவில்லை.. எனினும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் வரை பல்கலைக்கழகங்கள் காத்திருக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடிதம் எழுதி இருந்தது..
மேலும் அந்த கடிதத்தில் “ இந்தியாவில், உள்ள சில பல்கலைக்கழகங்கள், இளங்கலை பாடப்பிரிவுகளில் (2022-’23) மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளன, அவற்றின் கடைசி தேதி ஜூலை முதல் வாரத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கும் தேதியை மனதில் கொண்டு இளங்கலை சேர்க்கை செயல்முறையின் கடைசி தேதியை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முடிவுகளைத் தயாரிக்க சுமார் ஒரு மாதம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது..
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழக் துணை வேந்தர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.. அதில் “ சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம்.. தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. எனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக்கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது..