சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் விஜே மோனிகா இவருடைய வானிலை செய்திகளை யாரும் மறக்க முடியாது. சன் டிவி செய்திகளில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதுடன் இவர் தெய்வம் தந்த வீடு என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பத்து ஆண்டுகளாக தொகுப்பாளராக பணி புரிந்த இவர் 2008 ஆண்டு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவி சேனல்களில் மட்டுமல்லாமல் சமூக வலை தளத்திலும் தனக்கு தவறென பட்ட விஷயங்களை வீடியோவாக தொடர்ந்து வெளியிட்டு வந்து கொண்டிருந்தார். இதனாலே இவருக்கு அதிகமாக மிரட்டல்கள் வந்து கொண்டு இருந்ததாம்.
விஜே மோனிகா முதல் முதலாக காமெடி காலனி என்ற சீரியலில் அறிமுகமாகி பின்பு கடைசியாக செந்தூரப்பூவே என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வேந்தர் டிவியில் ஒளிபரப்பான சா பூத் திரி எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். என்னதான் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு பிடித்தது எல்லாமே தொகுப்பாளர் தானாம்.

அந்த வேலையை செய்வதில் எனக்கு எல்லை இல்லா ஆனந்தம் கிடைப்பதாக கூறியிருக்கிறார். சாமுவேல் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சினிமா இயக்குனராகவும் முயற்சி செய்து வருகிறாராம். இவருக்கு ஜேடன் என்னும் ஆண் குழந்தையும் இருக்கிறது.

சீரியல்களில் மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் எனும் திரைப்படத்தில் ஜீவாவுக்கு தங்கையாக மோனிகா நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்…