fbpx

’அட அப்படியே இருக்கு’..!! மாரிமுத்து கதாபாத்திரத்தை காப்பி அடித்த விஜய் டிவி..!! எந்த சீரியலில் தெரியுமா..?

சன்டிவியின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் மாரிமுத்து தற்போது நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது கேரக்டரை இமிடேட் செய்யும் வகையில் விஜய் டிவி சீரியல் ஒன்று தொடங்கியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த வாரம் நிறைவு பெற்றது. ஆனாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்ற பெயரில் தந்தை மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து புதிய சீரியல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து மற்றும் ஹேமா ராஜ்குமார் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக நடித்து வரும் இந்த சீரியலில், பிரபல வில்லன் நடிகர் அஜய் ரத்னம் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் பாண்டியன் (ஸ்டாலின் முத்து) மனைவி தனம் (நிரோஷா) கேரக்டரின் அண்ணனாக அஜய் ரத்னம் நடிக்கிறார்.

இந்நிலையில், அஜய் ரத்னம் சிறப்பாக நடித்து வந்தாலும், அவரது கேரக்டரின் தோற்றம், எதிர்நீச்சல் குணசேகரனை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதே வெள்ளை வேட்டி சட்டை, நெற்றியில் மஞ்சள், திருநீர், பூசிக்கொண்டு வருகிறார். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், எதிர்நீச்சல் குணசேகரன், மஞ்சளும் கும்குமம் வைத்திருப்பார். ஆனால், இவர் மஞ்சள் திருநீர் வைத்திருக்கிறார்.

இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அஜய் ரத்னம் என்ன எதிர்நீச்சல் குணசேரனனுக்கு போட்டியா என்று கேட்டு வருகின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சற்று விமர்சனங்களை சந்தித்தாலும் முதல் பாகத்தை போலவே வரவேற்பையும் பெற்று வருகிறது.

Chella

Next Post

பெற்ற தாயை பலாத்காரம் செய்ய முயற்சி..!! மறுத்ததால் கொடூரமாக கொன்ற மகன்..!!

Thu Nov 2 , 2023
கர்நாடக மாநிலம் தக்ஷணா கன்னடா மாவட்டம் கொண்டேலா கிராமத்தில் வசித்து வந்தவர் மூதாட்டி ரத்னம் ஷெட்டி (வயது 62). இவரது மகன் ரவிராஜ் செட்டி. கடந்த அக்.26ஆம் தேதி முதல் இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. நேற்று வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசியுள்ளது. இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், வீட்டில் சோதனை செய்தபோது, 62 வயது மூதாட்டி […]

You May Like