fbpx

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டம்..!! அரசுக்கு எச்சரிக்கை..!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தமிழக அரசின் நிதி நிலைமை சீரானதும் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எங்களது போராட்டம் கடுமையாக இருக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தும் வகையில் மார்ச் மாதம் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

Chella

Next Post

ஸ்மார்ட்போனில் மறைந்திருக்கும் 24 காரட் தங்கம்.. எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..?

Sun Feb 19 , 2023
இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது, ஸ்மார்ட் போன்கள் மக்களின் வேலையை எளிதாக்கி உள்ளது. எனவே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்க்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஒவ்வொரு நாளும் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஸ்மார்ட்போன்களில் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை. தங்கம் மற்றும் வெள்ளி சிறந்த மின்கடத்திகளில் […]

You May Like