fbpx

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு..? இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்..

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் தங்கி இருப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால் வழக்கத்தை விட இந்த நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், 21, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

டிகிரி படித்திருந்தால் போதும்.. எஸ்பிஐ வங்கியில் 1673 காலியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Thu Sep 22 , 2022
எஸ்பிஐ வங்கி பி.ஒ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் காலியாக ப்ரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12 ஆகும். இதன் மூலம் 1673 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. காலியிட விவரங்கள் […]
’உங்கள் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்’..!! எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு..!!

You May Like