fbpx

#BREAKING : டிசம்பர்-27, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்…!

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆலோசானை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளும், டிசம்பர்-27ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமைக் கழக அறிவித்துள்ளது.

Kathir

Next Post

உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் - அர்ஜென்டினாவில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு

Tue Dec 20 , 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புவெனஸ் ஐரிஸ்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை […]

You May Like