fbpx

பிறந்தநாளில் தாயை இழந்த பிரபலம்.. வாழ்த்து தெரிவித்து விட்டு பிரிந்த உயிர்..!! – திரைத்துறையினர் அஞ்சலி

நடிகர் கிங்காங்கின் பிறந்த நாளான இன்று அவரின் தாயார் காசி அம்மாள் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 17. இதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய கிங்காங், நடனத்திலும் கில்லாடியாக இருந்து வந்தார். தனது காமெடியால் மக்களின் மனங்களை கட்டி ஈர்த்துள்ளார். தமிழில் மட்டுமல்ல பாலிவூட்டிலும் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்திருந்தார் கிங்காங்.

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளன. இந்தநிலையில், நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் இன்று அதிகாலை 1.30′ மணிக்கு உயிரிழந்தார். நடிகர் கிங்காங்கின் பிறந்தநாளான இன்று அதிகாலை 12.30 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது தாயார் தெரிவித்துள்ளார். 72 வயதான அவரது தாயார், சற்று நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. நடிகர் கிங்காங் தனக்கு எல்லாமுமாக இருந்து தனது தாயார் மறைந்ததை எண்ணி பெரும் துயரத்தில் உள்ளார்.

இந்த நிலையில், உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள், பிரபலங்கள் கிங்காங்கின் பிறந்த நாளில் தனது தாயாரை இழந்ததால் எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் அவரை தேடி வருகின்றனர். மேலும் நடிகர் தாயார் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு..!! – ஆட்சியர் உத்தரவு

English Summary

On the birthday of actor King Kong, his mother Kasi Ammal died of a sudden heart attack at 1.30 am.

Next Post

நடிகர் மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!

Sun Aug 18 , 2024
There are reports that Malayalam actor Mohanlal has been admitted to hospital due to ill health.
ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் சிக்கிய மோகன்லால்..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

You May Like