fbpx

இந்த தேதியில், 6 மனிதர்கள் சூப்பர் பவர்களை பெறுவார்களாம்.. 2858-ல் இருந்து வந்த டைம் டிராவலர் சொன்ன தகவல்கள்..

நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியும் என்ற கோட்பாடு அல்லது கருத்தாக்கமே காலப்பயணம் அதாவது டைம் ட்ராவல் (Time Travel) என்று அழைக்கப்படுகிறது. காலத்தை கடக்க உதவும் மெஷின்களை உருவாக்கி அதிலிருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைம் ட்ராவல் மற்றும் டைம் மெஷின் குறித்தும் தற்போது வரை யாரும் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டவில்லை.

இந்நிலையில் 2858 ஆம் ஆண்டிலிருந்து வந்ததாகக் கூறும் டைம் ட்ராவலர் ஒருவர், அடுத்த 800 ஆண்டுகளில் உலகத்திற்கு என்ன வரப்போகிறது என்பது பற்றி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.. darknesstimetravel என்ற தனது சமூக ஊடக கணக்கைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு நடக்கும் 5 முக்கிய நிகழ்வுகள் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.. இந்த நிகழ்வுகளின் குறிப்பிட்ட தேதிகளையும் வழங்கியுள்ளார்.

காலப் பயணி கூறியபடி 2023 இன் 5 முக்கிய நிகழ்வுகள்:

  • ஏப்ரல் 2- மனிதர்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனுக்கு மாற்றாக புதிய தனிமம் கண்டுபிடிக்கப்படும்.
  • மே 13- நிலவு திடீரென பிங்க் நிறமாக மாறும், அதை வெறும் கண்களால் பார்ப்பவர்கள் பார்வையை இழக்க நேரிடும்.
  • ஜூன் 16- ஒரு பிரபலமான மற்றும் புகழ்பெற்ற பிரபலம் தனது மரணத்தை போலியாக கூறுவார்.
  • ஜூலை 2- சூரியனின் அதிகப்படியான ஆற்றலில் இருந்து 6 மனிதர்கள் சூப்பர்பவர்களைப் பெறுவார்கள்.
  • செப்டம்பர் 22- இந்த தேதியில், ஏரியா 51 அதன் முதல் அதிகாரப்பூர்வ மையத்தைக் கொண்டிருக்கும், இது வேற்றுகிரகவாசிகள் பற்றிய புதிய தகவலை வெளிப்படுத்தும்.

சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்டுள்ள இந்த டைம் டிராவலரின் கருத்துக்களுக்கு, நெட்டிசன்கள் கலவையான எதிர்வினைகளை பதிவிட்டு வருகின்றனர்..

Maha

Next Post

நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கம்.. அண்ணாமலை தகவல்..

Sat Apr 8 , 2023
நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு […]

You May Like