மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிப்பதால், மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.