fbpx

100 வருடங்களுக்குப் பிறகு நிகழ இருக்கும் ராஜயோகம்.! அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசிகள் எவை.?

வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைகிறது. இதற்குக் காரணம் இந்த வருடத்தில் பல ராஜ யோகங்கள் நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 100 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் கஜலட்சுமி ராஜயோகம் வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் நிகழ இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. வர இருக்கின்ற புத்தாண்டில் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக வருகின்ற மே மாதம் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைவார். அதேநேரம் சுக்கிரனும் ரிஷப ராசியில் நுழையும். இதனால் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசியில் நடைபெறுகிறது. இது கஜலட்சுமி ராஜயோகம் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கஜலட்சுமி யோகத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறது. அவர்களுக்கு சமூக மதிப்பு நிதி நிலையில் உயர்வு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்க இருக்கின்றன. இந்த யோகத்தால் அடிக்கப் போகும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.

கஜலட்சுமி ராஜயோகத்தால் பயன்பெறப்போகும் ராசிகளில் சிம்மராசியும் ஒன்று. சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகத்தால் பண மழை கொட்ட போகிறது. மேலும் அவர்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பாக்கியம் இருக்கிறது. அவர்களுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வந்து சேரும். கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் மற்றொரு ராசி தனுசு ராசியாகும். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் புதிய உயரங்களை எட்டும். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் வெற்றியாக அமையும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். கடக ராசி நேயர்களுக்கும் 2024 நிகழப்போகும் ராஜலட்சுமி ராஜயோகம் பல அதிர்ஷ்ட கதவுகளை திறக்கிறது. இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நல்லது நடக்கக்கூடிய அனுகூலங்கள் இருக்கின்றன. நிதி நிலையம் செல்வ வளமும் பல்கிப் பெருகும்.

Next Post

கீழ்வாதத்திற்கு அற்புதமான மருந்தா.? இது தெரிஞ்சா முட்டைக்கோஸ் தோலை இனி குப்பையில் போட மாட்டீங்க.!

Wed Dec 13 , 2023
வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் பெரும்பாலானோர் கீல்வாத நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் தீவிரமான வீக்கம் கீல்வாதமாகும். இந்த நோய் ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக இருப்பது உடைந்த எலும்புகள், உடல் பருமன் மற்றும் வயது முதிர்வு ஆகியவையாகும். இந்தக் கீல்வாதம் நோய்க்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும் இவற்றை முட்டைக்கோஸ் இலைகளின் மூலம் எளிதாக குணப்படுத்தி விடலாம் என […]

You May Like