fbpx

’ஒரே நாடு ஒரே தேர்தல்’..!! சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்த சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் மற்றொரு தீர்மானமாக 2026ஆம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுதலை பெற இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்.!?

Wed Feb 14 , 2024
நவீன காலத்தின் ஓட்டத்தினால் துரித உணவுகளாலும், முறையான உடற்பயிற்சி இல்லாமையாலும் நமது உடலில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் பெரும்பாலும் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் சரி செய்யக்கூடியதாகும். மலச்சிக்கலுக்கு முதன்மையான காரணம் நார்சத்து குறைபாடு தான். அவ்வாறே நார்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு நாம் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக தானியங்கள், பழங்கள் போன்றவற்றை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தின் வேகத்தில் நேரமின்மையால் நாம் […]

You May Like