fbpx

“ஒரே நாடு ஒரே தேர்தல்” ஜனநாயகத்திற்கு எதிரானது…! முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு..!

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

இதனையடுத்து இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி உள்ளது.

இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்த நிலையில் இந்த திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இதனை முழு பலத்துடன் எதிர்ப்போம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலினின் பதிவில், “‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.எழுக இந்தியா! இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்” என்று பதிவிட்டிள்ளார்.

Read More: DMK Files-3..!! அப்செட்டில் அண்ணாமலை..!! பாஜக மேலிடம் இப்படி சொல்லிருச்சே..!!

”இப்போது தேர்தல் வைத்தாலும் எடப்பாடியார் CM ஆவார்”..!! ”அவர் பேச்சில் சட்டப்பேரவையே ஆடிப்போய்விட்டது”..!! மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

English Summary

“One country one election” is against democracy…! Chief Minister Stalin’s opposition..!

Kathir

Next Post

ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய தாய்; போர்வைக்கு அடியில் இருந்து குழந்தைகள் பார்த்த காட்சி..

Thu Dec 12 , 2024
woman who had done many reels was killed by her husband

You May Like