fbpx

அரசு அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை..! நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு இது ஒரு செய்தி..! உயர்நீதிமன்றம் அதிரடி..

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவருக்கு 1 மாத சிறை தண்டனை

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 20கோடிஅளவில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியாராக இருந்த பொன்னையா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த நர்மதா, தாசில்தாரர் நீலா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நர்மதா தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார், மேலும் தவறாக இழப்பீடு வழங்கப்பட்ட தொகையில் 90% வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நர்மதா தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அவரை ஒரு மாத சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் நீதிமன்றம் உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்காமல் விடக்கூடாது, அப்படி விட்டுவிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள், எனவே இப்படி நீதிமன்றத்தை அவமதிக்கும் அதிகாரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை கூறும் வகையில் தான் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

Kathir

Next Post

உங்களுடைய வருங்கால வைப்பு நிதி பற்றிய தகவலை உடனே தெரிந்து கொள்ள வேண்டுமா…..? அப்படி என்றால் இதை படியுங்கள்…..!

Fri Aug 4 , 2023
ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும். பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதுதான் வருங்கால பைப்பு நிதியின் […]

You May Like