fbpx

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்… பாஜக எம்.பி-களுக்கு அதிரடி உத்தரவு…!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டது. அதேபோல் 1970ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்ட பின் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளது.

English Summary

One Nation, One Election Bill tabled in Parliament today… BJP MPs ordered to take action

Vignesh

Next Post

மாணவர்களே..!! அடுத்தாண்டு முதல் AI பாடத்திட்டம்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதை கவனிச்சீங்களா..?

Tue Dec 17 , 2024
My wish is to somehow introduce an AI curriculum next year.

You May Like