fbpx

கோயிலில் கற்பூரம் ஏற்றியதால் நடந்த விபரீதம்.. ஒருவர் பலி.. 11 பேர் மருத்துவமையில் அனுமதி..!! என்ன நடந்தது..?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில் சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் குலதெய்வம் சாமி கும்பிடுவதற்காக அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு உறவினர் மற்றும் குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அங்கு அரச மரத்தின் கீழ் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது கற்பூரம் ஏற்றியுள்ளனர்.

அப்போது அரசமரத்தில் இருந்த தேனீக்கூண்டு கலைந்து தேனீக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை துரத்தி துரத்தி கொட்டி உள்ளது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தேனீக்கள் கொட்டியதால் காயம் அடைந்த 11 பேர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயில் நேரில் சென்று தற்போது ஆறுதல் கூறினார்.

தேனீக்கள் கொட்டியதில் ஆறு பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். குலதெய்வ வழிபாடுக்குச் சென்ற இடத்தில் தேனீக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழந்து பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more:துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி..!!

English Summary

One person dies in bee sting near Vellore

Next Post

சாதமும் சப்பாத்தியும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம்.. மீறினால் என்ன நடக்கும்னு தெரியுமா? - நிபுணர்கள் எச்சரிக்கை

Sun Mar 9 , 2025
Health tips: Are you eating rice and chapati together? But be careful!

You May Like