fbpx

ஒருமுறை முதலீடு..!! லட்சங்களில் லாபம்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

இது பெண்களுக்காக தபால் துறை கொண்டு வந்த திட்டம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டில் அறிவித்தார். இத்திட்டம் ஏப்ரல் 1, 2023 அன்று தொடங்கியது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் இந்த திட்டத்தில் இணைந்து டெல்லி சன்சாத் மார்க்கில் உள்ள தபால் நிலையத்தில் பணத்தை முதலீடு செய்தார். இத்திட்டத்தின் பெயர் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) திட்டம். இதில், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

பெண்கள் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் 7.5% வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு மார்ச் 31, 2025 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது. கணக்கு தொடங்க விரும்புவோருக்கு இதே கடைசி தேதியாகும். இது ஒரு நிலையான வைப்புத் திட்டம் போன்றது. இதில் எந்த ஆபத்தும் இல்லை. இது ஒரு மொத்த வைப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 வருட முதலீட்டிற்குப் பிறகு இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும்.

எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டுப் பணத்துடன் வட்டியும் வழங்கப்படும். இரண்டு வருடங்களுக்குள் நடுவில் பணம் வேண்டுமானால் குறிப்பிட்ட அளவிற்கு எடுக்கலாம். இத்திட்டத்திற்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து வயதினரும் இதில் சேரலாம். இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால் தபால் நிலையத்திற்குச் சென்று கணக்கைத் தொடங்கலாம். சிறுமிக்கு சார்பாக பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம். கணக்கு திறப்பதற்கு KYC தேவை. எனவே ஆதார் அட்டை, பான், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை தேவை. விதிகளின்படி, திட்டத்தில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுக்கலாம். அதாவது, மொத்த முதலீட்டில் 40% திரும்பப் பெறலாம். குறிப்பாக, 2 லட்சத்தை முதலீடு செய்தால் ஓராண்டுக்குப் பிறகு ரூ.80,000 வரை எடுக்கலாம்.

எவ்வளவு முதலீடு, எவ்வளவு லாபம்? இத்திட்டத்தின் கீழ் கீழ் ரூ.50 ஆயிரத்தை முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி ரூ.8,011ஆக இருக்கும். ஆக மொத்தம் ரூ.58,011 கிடைக்கும். அதே 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,16,022 கிடைக்கும். அதே ரூ.1,50,000 டெபாசிட் செய்தால் ரூ.24,033 வட்டியுடன் ரூ.1,74,033 கிடைக்கும். அதே ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் வட்டி ரூ.32,044. எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.2,32,044 கிடைக்கும்.

Read More : பயில்வான் ஒரு மாமா பையன்..!! சென்னையில் பிட்டு பட ஷூட்டிங்..!! நல்ல கமிஷன்..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

ஜெட்லியின் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் கேப்டன் மகன்......

Wed May 15 , 2024
ஜெட்லியின் சீனப்படமான ‘மை பாதர் இஸ் ஏ ஹீரோ’ என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அவரின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் […]

You May Like