fbpx

ஆன்லைன் செயலி மூலம் கடன்….. மனைவியின் புகைப்படம் ஆபாசமாக வந்ததால்… நபர் விபரீத முடிவு….

சென்னையில் ஆன்லைனில் கடன் வாங்கியதால் ஆபாசமாக புகைப்படம் வந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த சத்யநாராயணன் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் சத்யநாராயணன், செல்போன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த கடனை இவர் திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திருப்பி செலுத்துமாறு கூறி மிரட்டியதாக கூறப்படுகிது.

அதுமட்டுமில்லாமல், அவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்றும், அவருடைய தாயாரை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படத்தை அவருடைய எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதோடு மட்டும் விடாமல், சத்தியநாராயணனின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால், மனமுடைந்த சத்தியநாராயணன் வீட்டில் பூச்சி மருந்து எடுத்து குடித்து விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனையாரிந்த, உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

read more… பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு உயிரிழந்த அமெரிக்க பிரபலம்..!! சோகத்தில் ரசிகர்கள்

English Summary

online app kadan.. wife photos are morphed.. so his husband death.

Next Post

மீண்டும் இணைந்த பழைய காதல் ஜோடி... அம்பானி வீட்டு விசேஷத்தில் விசேஷம்.. சர்சசையில் சிக்கிய ஜோடி…

Mon Jul 15 , 2024
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள் மீண்டும் இனைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. உலக கவனம் ஈர்க்கும்  வகையில்  முகேஷ் அம்பானி – நீட்ட அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பெரும் நட்சத்திரங்கள், சினிமா – விளையாட்டு – தொழில்துறை என பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் […]

You May Like