fbpx

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..!! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், இந்த கூட்டம் 30 நிமிடங்களுக்குள்ளாகவே முடிவடைந்தது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..!! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி

அக்டோபர் 10 முதல் 13 வரை சட்டமன்றத்தை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதால், துறை வாரியாக அமைச்சர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி, டேவிதார் ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுகுறித்தும் முடிவெடுக்கப்பட்டது. மழை, வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில், துறை வாரியான செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 6 ராணுவ வீரர்கள் பலி..

Mon Sep 26 , 2022
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் […]

You May Like