ஆன்லைன் சூதாட்டத்திற்குதடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலங்களில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். இதன் விளைவாக தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன. இது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எத்தனையோ செய்திகள் வந்த போதிலும் தற்கொலைகளை தடுக்கமுடியவில்லை.
இந்நியைில் ரம்மி செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ரம்மி தடை செய்வது தொடர்பாக நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன்லைன் செயலியான ரம்மியை தடை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. ரம்மி மீதான தடை குறித்து பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ’’ பள்ளி மாணவர்கள் மீது இணைய வழி விளையாட்டுக்கள் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித்துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் கருத்து பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனை ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையில் வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.8.2022ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது’’
இக்கூட்டத்தில் அவசரச்சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைபடுத்தப்பட்டு மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு இன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. விரைவில் இந்த சட்டம் பிரகடனப்படுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.