fbpx

அதிரடி…! 15 நாட்கள் தான் அவகாசம்…! உடனே வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்…! இல்லை என்றால் ரத்து…!

சென்னை மற்றும்‌ தமிழ்நாடு முழுவதும்‌, பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில்‌ கழிவுநீர்‌ தொட்டியை சுத்தம்‌ செய்து கழிவுநீரை எடுத்துச்‌ செல்ல கழிவுநீர்‌ வாகனங்கள்‌ பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர்‌ அகற்றும்‌ தொழில்‌ புரிவோர்‌ தடுப்பு மற்றும்‌ அவர்களது மறுவாழ்வுச்‌சட்டம்‌, 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும்‌ கழிவுநீர்‌ தொட்டியை சுத்தம்‌ செய்ய பயன்படுத்த கூடாது என சட்டம்‌ உள்ளது.

இதனை மீறுவோர்‌ மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும்‌ அபராதம்‌ விதிக்கவும்‌ வழிவகை உள்ளது. கழிவுநீர்‌ எடுத்துச்‌ செல்லப்‌ பயன்படுத்தும்‌ வாகனங்களின்‌ பதிவுப்‌ புத்தகத்தில்‌ வாகனத்தின்‌ வகை, கழிவுநீர்‌ அகற்றும்‌ வாகனம்‌ என பதியப்பட்டிருக்க வேண்டும்‌.

எனவே கழிவுநீர்‌ வாகன உரிமையாளர்கள்‌, தங்களது வாகனத்தின்‌ பதிவுச்‌சான்றிதழில்‌ கழிவுநீர்‌ அகற்றும்‌ வாகனம்‌ என பதிவு செய்யப்படவில்லை என்றால்‌, சம்பந்தப்பட்ட வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப்‌ புத்தகம்‌ மற்றும்‌அனுமதிச்‌ சீட்டில்‌ “கழிவு நீர்‌ அகற்றும்‌ வாகனம்‌” என உரிய தகுதிச்சான்றுடன்‌ 15 தினங்களுக்குள்‌ பதிவு செய்து கொள்ள பிரிவு 86 மோட்டா வாகன சட்டம்‌,1988-ன்படி இதன்‌ மூலம்‌ அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு செய்து கொள்ள தவறினால்‌, அணுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே..!! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்..? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

Fri May 26 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்றது. 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கடந்த 29ஆம் தேதி […]

You May Like