ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவி : தகவல் தொழில்நுட்ப பணியாளர்
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் : குறைந்தது 3 ஆண்டுகள் அரசு மற்றும் அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, பணி அனுபவம் உள்ளர்களுக்கு முன்னுரிமை.
விண்ணப்பதாரர்கள் : இந்த பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
2. பதவி : வழக்குப் பணியாளர் (Case Worker)
கல்வித்தகுதி : சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் : உளவியல் ஆலோசகர் (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஒரு வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000
3. பதவி : பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
இந்தப் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதன் தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு – 638 011.
குறிப்பு : விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது