வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கோட்டக் மகேந்திரா வங்கியும் தனது ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி தனியார் வங்கிகள் பலவும் அவ்வப்போது டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அண்மையில், தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கியும் (Kotak Mahindra Bank) வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, தற்போது வரைக்கும் டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய டெபிட் கார்டு வாங்குவதற்கு கோடக் மகேந்திரா வங்கி ரூபாய் 200 கட்டணமாக வசூல் செய்து வருகிறது.
மேலும், வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தானாகவே ரத்து செய்யப்பட்டால் அதன் பின்பு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 25 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹ 10 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான அனைத்து டெபிட் கார்டுகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக கோடக் மகேந்திரா வங்கி அறிவித்துள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு வரும் மே 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.