குங்குமம்
குங்குமம் கலந்த நீரை வீட்டில் அனைவரது கண்கள் படும்படியான இடத்தில் வைத்தால் கண் திருஷ்டி ஒழிந்துவிடும்.
சாம்பிராணி
வீட்டில் தூபம் காட்டும்போது, அதில் சிறிது கருவேலம் பட்டை பொடி மற்றும் வெண்கடுகு பொடி சேர்த்து தூபம் போட்டால் கண் திருஷ்டி நீங்கும்.
உப்பு
உப்பு கொண்டு திருஷ்டி கழித்தால் கண் திருஷ்டி நீங்கும்.
உப்பு குளியல்
வாரம் ஒருமுறை கல் உப்பை நீரில் போட்டு கரைத்து குளித்து வந்தால், கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் நீங்கும்.
கண்ணாடி
ஒரு பெரிய சைஸ் கண்ணாடியை வீட்டின் வெளியில் மாட்டி வைத்தால் கண் திருஷ்டி நீங்கும்.
ஆகாச கருடன் கிழங்கு
இந்த கிழங்கை சுற்றி 27 மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வீட்டின் முன் கட்டினால் கண் திருஷ்டி நீங்கும்.
எலுமிச்சம் பழம்
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதற்குள் குங்குமத்தை பூசி வீட்டின் நிலைவாசலில் வைத்தால் கண் திருஷ்டி நீங்கும்.
மீன்
வீட்டில் மீன் தொட்டி இருந்தால் அதில் கருப்பு மீன் வளர்ப்பதன் மூலம் கண் திருஷ்டி நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
வெண் கடுகு
ஒரு ஸ்பூன் வெண் கடுகை கொண்டு வீட்டில் தூபம் போட்டு வந்தால் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் நீங்கும்.
Read More : ஏப்ரல் 16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!