fbpx

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…! 18 வயது நிரம்பிய 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பயிற்சி…! முழு விவரம் இதோ…

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்ட திட்டங்களையும்‌ குறித்த இணைய வழிகருத்தரங்கம்‌ பயிற்சியினை வரும்‌ 03.06.2023ம்‌ தேதி (காலை 10.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில்‌ ஏற்றுமதி சந்தையின்‌ தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள்‌,ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள்‌, வங்கி நடைமுறைகள்‌, அந்நிய செலாவனியின்‌ மாற்று விகிதங்கள்‌, காப்பீடு குறித்த தகவல்கள்‌, ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள்‌ மற்றும்‌ ஆவணங்கள்‌, போன்றவை பயிற்றுவிக்கப்படும்‌. மேலும்‌, இப்பயிற்சியில்‌ ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள்‌ பற்றியும்‌ அவைகளை பெறும்‌ முறைகளை பற்றியும்‌ ஆலோசனைகளும்‌, அரசு வழங்கும்‌ உதவிகள்‌ மற்றும்‌ மானியங்கள்‌ ஆகியவையும்‌ விவாதிக்கப்படும்‌.

ஏற்றுமதி சார்ந்த தொழில்‌ துவங்க விரும்பும்‌ அல்லது தற்போது உற்பத்தி செய்யும்‌ பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும்‌ 18 வயது நிரம்பிய 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும்‌ சேரலாம்‌. இப்பயிற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களை பெற விரும்புவோர்‌ www.editn.in என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை) காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாய பாடம்‌...! தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு...!

Sat May 27 , 2023
தமிழகத்தில் வரும்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்‌ கட்டாயபாடம்‌ என்பதை தனியார்‌ பள்ளிகள்‌ சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 10-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தமிழ்‌ பாடத்தை கட்டாயம்‌ படித்து இருக்க வேண்டும்‌ என சட்டம்‌ இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு முழுமையான செயல்‌வடிவம்‌ கொடுக்கும்‌ வகையில்‌, […]
’எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது’..! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!

You May Like