பாரத் பாசிப் பருப்பு மற்றும் 118 டன் பாரத் மசூர் பருப்பு ஆகியவை நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாரத் பருப்பு திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. 2023 ஜூலையில் சன்னாவை சன்னா பருப்பாக மாற்றி நுகர்வோருக்கு சில்லறை விற்பனைக்காக அதிகபட்ச சில்லறை விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.60 மற்றும் 30 கிலோ பேக்கிற்கு கிலோ ரூ.55 என்ற விலையில் செப்டம்பர் 30, 2024 வரை அறிமுகப்படுத்தியது. மேலும் 3 லட்சம் டன் சன்னா இருப்பை சில்லறை விற்பனைக்கு முறையே கிலோ ரூ.70 மற்றும் ரூ .58 என்ற விலையில் சில்லறை விற்பனைக்கு ஒதுக்குவதன் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாசிப்பருப்பு மற்றும் மசூர் பருப்புகளுக்கும் பாரத் பிராண்ட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாசிப்பயறு பாசிப்பருப்பு ஆக மாற்றப்பட்டு பாரத் பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்கு முறையே கிலோ ரூ .107 மற்றும் ரூ .93 க்கு விற்கப்படுகிறது. பாரத மசூர் பருப்பு கிலோ ரூ.89-க்கு விற்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 12.35 லட்சம் டன் பாரத் சன்னா பருப்பு, 5,663.07 டன் பாரத் பாசிப் பருப்பு மற்றும் 118 டன் பாரத் மசூர் பருப்பு ஆகியவை நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவை முறையே 06.11.2023 மற்றும் 06.02.2024 ஆகிய தேதிகளில் பொது நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக 30.06.2024 வரை பாரத் ஆட்டா கிலோ ஒன்றுக்கு ரூ.27.50 என்ற விலையிலும், பாரத் அரிசி கிலோ ரூ.29 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் கட்டமாக, பாரத் ஆட்டா கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையிலும், பாரத் அரிசி கிலோ ரூ.34 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 30.06.2024 வரை முதல் கட்டத்தின் போது மொத்தம் 15.20 லட்சம் மெட்ரிக் டன் பாரத் ஆட்டா மற்றும் 14.58 லட்சம் மெட்ரிக் டன் பாரத் அரிசி நுகர்வோருக்கு கிடைத்தன. நடப்பு இரண்டாம் கட்டத்தில், 2,952.25 மெட்ரிக் டன் பாரத் ஆட்டா மற்றும் 3,413.35 மெட்ரிக் டன் பாரத் அரிசி பொது நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.