கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் வென்றார்.
‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
சிறந்த இயக்குநர் விருதுக்கு 5 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ படத்தை இயக்கிய ஜஸ்டின் ட்ரியட், ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்செஸி, ‘புவர் திங்ஸ்’ படத்தை இயக்கிய யோர்கோஸ் லான்திமோஸ், ‘தி ஸோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட்’ படத்தை இயக்கிய ஜானதன் க்ளேஸர் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்தனர். இந்நிலையில், தற்போது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
அதேபோல், Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோன்னுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 8 முறை பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
Read More : Ration | ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி உங்கள் கையில் இருக்கும் ஃபோனிலும் பார்க்கலாம்..!!