தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதேபோல், 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டு பரீட்சை நடந்து முடிந்தது. மேலும், 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வு நடந்தது.
இந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்தது. அந்த வகையில், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, ஜூன் 4இல் வாக்குகள் எண்ணப்படும் என்பதாலும், மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க, அதன் பின் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் தேர்தல் முடிவு, வெயில், மழை போன்ற காரணங்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: வீடுகளில் இனி தெரியாமல் கூட இதை வளர்க்காதீங்க..!! சிக்கினால் ஜெயில் தான்..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!