All-party MPs’: இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் கொண்ட பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கதையை எதிர்கொள்வதற்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த தனது நிலைப்பாட்டை முன்வைக்க இந்தியா பல்வேறு கட்சி எம்.பி. பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப உள்ளது. இது தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது.
வரும் 22ம் தேதிக்கு பிறகு இந்த பயணம் இருக்கும். மூத்த எம்.பி.,க்கள் இக்குழுவிற்கு தலைமை தாங்க உள்ளனர். இக்குழுவில் 5 முதல் 6 எம்.பி.,க்கள் இடம்பெறுவார்கள். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஏற்பாடு செய்து வருகிறார். அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு எம்.பி.,க்கள் குழுவினர் செல்ல உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
Readmore: வரும் மே 29, 30 தேதிகளில் ஆலோசனை கூட்டம்…! கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!