இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2022ஆம் ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும் பதவியேற்றார். இங்கிலாந்தில் கடந்த முறை நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்த கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், ஜூலை 4ஆம் தேதி இங்கிலாந்து பொதுத்தேர்தல் நடைபெறும் என முன்னதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். இங்கிலாந்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய பொதுத் தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் லேபர் கட்சியின் ஸ்டார்மர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 6 வார கால பிரசார பயணத்தில் சுனக், ஸ்டார்மர் இருவரும் சூறாவளி பிரசாரம் செய்துள்ளனர். தேர்தலில் 326 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இதுவாகும்.
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தோ்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Read more | விஜய்யுடன் கோர்த்துவிட்ட சுசித்ரா!. தக்க பதிலடி கொடுத்த திரிஷா!.