fbpx

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமண அங்கீகாரம்…! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…! முழு விவரம் இதோ…

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் இந்து திருமண சட்டம் 1955, கிறிஸ்தவ திருமண சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டம் 1936, சிறப்பு திருமண சட்டம் 1954, வெளிநாட்டுத் திருமண சட்டம் 1969 ஆகியவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை தான் அங்கீகரிக்கின்றன.

திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் நடக்க வேண்டும் என சட்டங்கள் சொல்கின்றன. ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்வது சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் குடும்ப அமைப்புகளை தாண்டி, இதுபோன்ற திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கூடாது. எனவே, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை ஏற்க கூடாது என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

8-ம் வகுப்பு மாணவியை மலை பகுதியில் வைத்து கூட்டு பலாத்காரம்...! ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சி...!

Mon Mar 13 , 2023
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தனது பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சியின் போது கடத்திச் சென்று மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். மேலும் நடந்த […]

You May Like