fbpx

எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்கானது… “வாரிசு அரசியல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – பிரதமர் மோடி

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசிய கோடி ஏற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய கடைசி சுதந்திர தின உரை என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மணிப்பூர் நெருக்கடி குறித்து பேசியதுடன், பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். பிரதமர் பேசியது “உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இப்போது இந்தியா முன்னணி நாடாகவும் உள்ளது. இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது – இவை மூன்றும் சேர்ந்து தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்த முறை, இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த 1000 ஆண்டுகளைப் பற்றி பேசுய பிரதமர் மோடி, நாட்டின் முன் உரையாட மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, எனவே நாம் எடுக்கும் நடவடிக்கைகளும், நாம் எடுக்கும் முடிவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் 1000 ஆண்டுகளில் நாட்டின் பொன்னான வரலாற்றை முளைக்கும். 2014ல், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என்று மக்கள் முடிவு செய்தனர். உறுதியற்ற காலத்திலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது. எங்கள் அரசு பொறுப்பேற்கும் போது, ஊழல் ஒரு அரக்கனாக இருந்தது. லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் இருந்தன. இந்தியா இப்போது 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது’ என்பதை பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

மேலும் அடுத்த மாதம் “விஸ்வகர்மா யோஜனா” திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார். விஸ்வகர்மா திட்டத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என கூறினார். இந்தியாவின் திறன் விண்வெளி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆழ்கடல் பணி, ரயில்வேயின் நவீனமயமாக்கல் – வந்தே பாரத், புல்லட் ரயில் – அனைத்திலும் நாம் முன்னேறி வருகிறோம். இணையம் கிராமத்தை எட்டியுள்ளது. நாம் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்துகிறோம்.

மேலும் பேசிய பிரதமர் “எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்கானது. குடும்பத்திற்காக மட்டும், குடும்பத்திற்கே அனைத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கொள்கை. நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததால் எனக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வாரிசு அரசியல் இல்லாத, ஊழல் இல்லாத, கொள்கைகளில் சமரசம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எனது கொள்கை. 10 கோடி போலி நலத் திட்ட பயனாளிகளை எங்களது அரசு களையெடுத்தது. முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் பறிமுதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுவே நமது தாரக மந்திரம். 2014, 2019ஆம் ஆண்டு பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்தனர். பெரும்பான்மை அரசால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும் என்று பிரதமர் கூறினார்.

Kathir

Next Post

சுதந்திர தின விழா…..! கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

Tue Aug 15 , 2023
நாடு முழுவதும் இன்று இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று கோலாகலமாக இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில், கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார். தமிழக அரசின் […]

You May Like