fbpx

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு… இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.. உயர்நீதிமன்றம் கருத்து..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தார்..

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.. இந்த வழக்கு கடந்த வாரம், நீதிபதி ஆர் மகாதேவன் முஹம்மது ஷபிக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி விசாரணைக்கு தயார் என அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்தனர்.. ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

அந்த வகையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாலிங்கம், முகம்மது சஃபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.. எனவே இதில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது.. இந்த மனுவை நேரடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம்.. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும்.. அன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மற்றும் வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் தொடர்ந்த அனைத்து மேல் முறையீடு மனுக்களும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

3வது முறையாக மோடியை பிரதமர் ஆக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்…..! உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி…..!

Mon Apr 3 , 2023
மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார். அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி […]
நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

You May Like