பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமே இல்லை என்று ஓபிஎஸ் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க முடியாது. கோயிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஓபிஎஸ். அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமே இல்லை. அதிமுகவை ஒருபோதும் எதிரிகளிடம் அடமானம் வைக்க மாட்டோம்” என்றார்.
மேலும், ”திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் அதிமுகவுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம்” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், நாங்கள் ஆட்சியில் இல்லாதபோது உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்களை எப்படி செய்ய முடியும்..? என்று பதிலளித்தார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது, தமிழக பிரச்சனை தொடர்பாக மனு அளித்துள்ளோம். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது. ” என்றார்.
Read More : வெடித்தது புதிய சர்ச்சை..!! சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் இந்தி மொழியும் சேர்ப்பு..!!