தேர்தல் ஆணையத்துக்கு அடுக்கடுக்கான புகார்களை அனுப்பும் ஓபிஎஸ்..! கடந்து போகும் ஈபிஎஸ்..!

அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் இரு அணியினரும் சட்டரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

AIADMK Row O Panneerselvam Expelled From AIADMK And Palaniswami Appointed  As Interim General Secretary ANN | OPS Vs EPS: AIADMK में वर्चस्व की लड़ाई,  क्या पन्नीरसेल्वम पार्टी के लिए डटे रहेंगे या

அந்த கடிதத்தில், “இன்று வரை அதிமுக கட்சியில் நான் ஒருங்கிணைப்பாளர் என்றும் மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் கடிதம் எழுதியுள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பட்டியலை ஏற்கக் கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாகவே, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ், ஒரு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தங்கம் விலை இன்றும் உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்...

Thu Jul 14 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
தங்கம்

You May Like