’எடப்பாடியிடம் ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம்; தனது செயலுக்கு ஓபிஎஸ், இ.பி.எஸ்ஸை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

’எடப்பாடியிடம் ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!

ஓபிஎஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை. ரவீந்திரநாத்தை நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்கள்தான் அதிமுக-வின் பலம்.

’எடப்பாடியிடம் ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!

அதிமுகவில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கினார். அதிமுகவுக்கும் , எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறுவார். அப்படியே இருப்பேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்..! இன்னும் ஒரு மாதத்திற்குள்..! சென்னை ஐகோர்ட் அதிரடி..!

Fri Jul 15 , 2022
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. […]

You May Like