ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ்-க்கு அனுப்பி உள்ளனர். இது ஓபிஎஸ்- க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முக்கிய தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் பேசி புதிய பதவி கொடுத்துள்ளார். ஈரோடு மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளராக தங்கராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக பாஸ்கரன் மற்றும் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக ஜெயப்பிரகாசை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.