fbpx

ஓ.பி.எஸ். கையில் கடைசி ஆயுதம்… பிரம்மாஸ்திரம் எடுபடுமா? 

அதிமுக-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு கடைசி ஆயுதம் இருப்பதாகவும் தேவைப்படும்பட்சத்தில் அந்த பிரம்மாஸ்திரத்தை ஓ.பி.எஸ். எய்வார் என்று பேசப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். திமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்மொழிய செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு சென்றார். அப்போது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களால் அதிமுக சூறையாடப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.இதனால் ஓ.பன்னீர்செல்வம் உடனே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்தியதை அங்கீகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகிற 30ம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் நீதிமன்றத்தை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்காமல் பாஜக மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருகின்றார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசப்படும் தகவல் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அதாவது தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், பாஜக மேலிடம் ஆகிய 3 வாய்ப்புகளில் ஒன்றாவது தனக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஓபிஎஸ் காத்திருக்கின்றார். ஒருவேளை இந்த 3 வாய்ப்புகளும் தனக்கு கை கொடுக்காத பட்சத்தில் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்த காலத்தில், தனக்கு ஆதரவான உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி மற்றும் அவரது சகாக்களின் ஊழல் விபரங்களை, சேகரித்து வைத்து உள்ளதாகவும் அதையே பிரமாஸ்திரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலங்கிக்கிடப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Next Post

விசாரணை கைதி தூக்குப் போட்டு தற்கொலை: அலட்சியமாக இருந்த காவலர் சஸ்பெண்டு..!

Tue Sep 27 , 2022
அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் முருகானந்தம் (37). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக இன்று காலை 6 மணியளவில் சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளிகள் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக […]

You May Like