தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நாளை, நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
மேலும் , ஓரிரு இடங்களில் 12-20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கேரளாவிலும் நாளை மறுநாள் (டிச.17) மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.