fbpx

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!! 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், சென்னையில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 15) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’என்னை கொல்ல 2 முறை சதி’..!! ’துப்பாக்கிகளுடன் கைது’..!! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Nilgiris and Coimbatore districts are likely to receive very heavy rains today (July 15). Hence, Orange Alert has been issued today.

Chella

Next Post

இத்தனை பேர் போலிச் சான்றிதழ்கள் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனவர்களா? வெளியான பகீர் தகவல்!! உண்மை என்ன?

Mon Jul 15 , 2024
IAS, IPS using reservation through fake certificates Ayush Sangi has posted on his X site with proof that many people have got the jobs. The news about this is spreading fast on the internet.

You May Like