fbpx

தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (20-10-2024) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று காலை (21-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 22ஆம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.

இதன் காரணமாக இன்று (21.10.2024) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read More : சாப்பாடு கொடுக்கும் மாமா செய்த அசிங்கமான காரியம்..!! அந்தரங்க உறுப்பில் வலி..!! 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

English Summary

Thanjavur, Pudukottai and Ramanathapuram districts will witness heavy to very heavy rains

Chella

Next Post

உஷார் மக்களே.. திங்கள் கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்..!! - மருத்துவர்கள் எச்சரிக்கை

Mon Oct 21 , 2024
Rates of heart attack increase on Mondays, doctor issues alert, know reason

You May Like