இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்றாகும். தினமும் பில்லியன் கணக்கான செய்திகள் பரிமாறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நேரங்களில், நீங்கள் செய்தி அனுப்புவதற்கு WhatsApp ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் வருவதை நிறுத்த விரும்பலாம். வாட்ஸ்அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே மெசேஜ் பெறுவதை தவிர்க்க முடியும்..
மேலும் உங்கள் மொபைல் டேட்டா அல்லது வைஃபை ஆன் செய்யப்பட்டிருந்தால், வாட்ஸ்அப்பில் தொடர்ந்து செய்திகளைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் மெசேஜ்களுக்கான நீல நிற அடையாளத்தை அணைப்பதில் எந்த மாற்றமும் இருக்காது.. எனவே வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்யாமல், அதை எப்படி Disable செய்வது என்று பார்க்கலாம்..
- வாட்ஸ்அப் செயலியை லாங் பிரஸ் செய்து, “App info” ஐகானை கிளிக் செய்யவும்.
- இப்போது மேலே “Force Stop” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்..
- பின்னணியில் உள்ள WhatsApp பயன்பாட்டை மூடவும்.
- இது முடிந்ததும், வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் பெற முடியாது..
இருப்பினும், நீங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்தவுடன், அது மீண்டும் செயல்படத் தொடங்கும், பின்னர் உங்களுக்கு செய்திகள் வரும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பயன்பாட்டை முடக்க விரும்பினால், செய்திகளைப் பெறாமல் இருக்க “Force Stop” விருப்பத்தைப் பயன்படுத்தவும்.