fbpx

தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்.. கொட்டப்போகுது கனமழை..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13, 16,17 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 13, 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களும் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read more ; இளைஞர்களின் திடீர் மரணம்!. இந்த 5 காரணங்களே காரணம்!. ICMR ஆய்வில் அதிர்ச்சி!

English Summary

Orange alert for Tamil Nadu.. Heavy rain is going to pour in 2 days..!! – Meteorological Center Alert

Next Post

Gold Rate : உச்சம் தொட்ட தங்கம் விலை.. மீண்டும் 58 ஆயிரத்தை கடந்தது..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Wed Dec 11 , 2024
Gold Rate: The price of gold reached its peak.. crossed 58 thousand again..!! Do you know what the rate is today?

You May Like