Stalin: மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதிகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடியை நேரடியாக உதவி செய்தாரா பிரதமர்?
மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதிகள் குறைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் நீங்க நலமா திட்டம்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அரசு வெள்ள பாதிப்புகளை முறையாக கையாளவில்லை என்றும், ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் திமுக ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
Readmore: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு..!! 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஜாமீன்..!!