fbpx

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம்..! எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்ய முடியாது..! அமைச்சர் அதிரடி

”ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்கப்பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நீட் மசோதாவுக்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை என அவர் கூறினார்.

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம்..! எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்ய முடியாது..! அமைச்சர் அதிரடி

கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதற்கு யாராவது கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதா என கேள்வியெழுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது ஆன்லைன் விளையாட்டு தடைக்கு அவரச சட்டம் பிறபிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இந்தியாவில் வேகமாக பரவும் லம்பி வைரஸ்.. இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு...

Wed Sep 14 , 2022
இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57,000க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கால்நடைகள் இந்த லம்பி வைரஸ் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன்.. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பசுக்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் நாடு முழுவதும்  57,000த்துக்கும் அதிகமான பசுக்கள் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளன. இவற்றில் 37,000 பசுக்கள் ராஜஸ்தானில் மட்டும் இறந்துள்ளன. குறிப்பாக […]

You May Like