fbpx

12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது பெண்…..! தொந்தரவு தாங்காமல் விடுதியை விட்டு ஓட்டம் பிடித்த சிறுவன்……!

நாகை மாவட்டம் காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில், வசித்து வருகிறார்கள்.

இது சில ஆதரவற்ற குழந்தைகளும் இருக்கும் இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருடன் இணைந்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் ஒரு வீட்டில் குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இத்தகைய நிலையில், நேற்று இந்த காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுவன் சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அதனைப் பார்த்த காப்பக நிர்வாகிகள் சிறுவனை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். அப்போது தன்னுடைய பாதுகாவலராக இருக்கிற 40 வயது பெண்மணி தன்னிடம் கடந்த மூன்று தினங்களாக பாலியல் தின்றது ஈடுபடுவதாகவும் இதன் காரணமாக தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, நாகை மாவட்ட குழந்தைகள் நலத் பிரிவில் காப்பக நிர்வாகிகள் தகவல் வழங்கினர். குழந்தைகள் நல அலுவலர் சிறுவனிடம் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்திய போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக காப்பகம் நிர்வாகிகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண் காப்பாளரை கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ராஜப்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காதல் திருவாரூர் சிறையில் அடைத்துள்ளனர் பாதுகாவலரே சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாகை தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இதுபோல ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நபர்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்ட போது நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதோடு மேலும் ஒரு காப்பகம் மூடும் நிலை ஏற்பட்டது.

Next Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய அரசு பள்ளி முதல்வர் அதிரடி கைது…..!

Mon Jun 5 , 2023
ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் சந்திரன். இவர் மீது அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 6 பேர் கடந்த மே மாதம் 31ம் தேதி பாலியல் புகார் வழங்கினர். அங்கே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை தினங்களில் கூட சில மாணவிகளை தலைமை ஆசிரியர் ரமேஷ் பள்ளிக்கு அழைத்திருக்கிறார். […]

You May Like